சட்டசபை தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும்-கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்த தவறும் செய்ய முடியாது. நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.

Update: 2021-04-30 18:32 GMT
சிவகங்கை,

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்த தவறும் செய்ய முடியாது. நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.

எந்த தவறும் செய்ய முடியாது

சிவகங்கையில் நேற்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சட்டமன்ற தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புக்கள் இறுதி முடிவு அல்ல. ஆனால் தற்போதைய சட்டசபை தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தான் மகத்தான வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
 மின்னணு வாக்குபதிவு எந்திரத்தில் எந்த தவறும் செய்ய முடியாது. இதில் எந்த ஐயப்பாடும் தேவையில்லை.

தடுப்பூசி போடுவது நல்லது

தற்போது பரவி வரும் கொரோனா தொற்றை தவிர்க்க தடுப்பூசி போடுவது தான் நல்லது. மக்கள் தங்களின் பாதுகாப்பை தங்களே பார்த்து கொள்ள வேண்டும். 243 தொகுதிகளை கொண்ட தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் 294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காளத்தில் 8 கட்டமாக தேர்தல் நடத்தியுள்ளனர். அங்கும் ஒரே கட்டமாக ஏன் நடத்தவில்லை. ஆக்சிஜன் தேவைக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறந்துள்ளனர். இதில் தவறு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்