திருச்சி அரசு மருத்துவமனையில் டேங்கர் லாரி மூலம் தினமும் ஆக்சிஜன்

திருச்சி அரசு மருத்துவமனையில் டேங்கர் லாரி மூலம் தினமும் ஆக்சிஜன் நிரப்பப்படுகிறது

Update: 2021-04-30 19:23 GMT
திருச்சி,
திருச்சி அரசு மருத்துவமனையில் 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட  ராட்சத ஆக்சிஜன் சிலிண்டர் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு தடையின்றி ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. வாரத்துக்கு 3 முறை இந்த சிலிண்டரில்  டேங்கர் லாரி மூலம் ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டு நிரப்பப்பட்டு வந்தது. தற்போது கொரோனா சிகிச்சை பெறுபவர் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் நாளொன்றுக்கு 5 ஆயிரம் லிட்டர் வரை ஆக்சிஜன் செலவிடப்படுகிறது. இதனால் ராட்சத ஆக்சிஜன் சிலிண்டரில் தினமும் 10 ஆயிரம் லிட்டர் வரை ஆக்சிஜன் நிரப்பப்பட்டு வருகிறது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 600 நோயாளிகளுக்கு மேல் உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்