மணல் திருட்டில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

மணல் திருட்டில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2021-05-01 20:20 GMT
ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள பெரியகருக்கை கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்ராஜ்(வயது 25). இவர் சம்பவத்தன்று இரவு கருக்கை கிராமத்தில் உள்ள பாலம் அருகே டிராக்டரில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், ஆண்டிமடம் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் இது குறித்து ஆத்துக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாகனத்தை கைப்பற்றி, செந்தில்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர் மணல் திருட்டில் தொடர்ந்து ஈடுபடக்கூடும் என்பதால் அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதை ஏற்று செந்தில்ராஜை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் ரத்னா உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து போலீசார் நேற்று திருச்சி மத்திய சிறையில் செந்தில்ராஜை அடைத்தனர்.

மேலும் செய்திகள்