படப்பை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் சிறுமி பலி

படப்பை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் சிறுமி பலியானார்.;

Update:2021-05-06 08:15 IST
படப்பை, 

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் நாராயணன் இவருடைய மகள் ஜெயந்தி (வயது 16). இவரது சித்தப்பா கண்ணையன் படப்பை அரசு பள்ளி எதிரே இளநீர் கடை வைத்துள்ளார்.

ஜெயந்தி இளநீர் கடைக்கு சென்று இளநீர் வியாபாரம் செய்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலை இளநீர் கடையில் இருந்து மோட்டார் சைக்கிளில் படப்பை பஜார் பகுதி அருகே சாலையை கடக்கும்போது அந்த வழியாக வேகமாக வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக் கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் ஜெயந்தி தலை நசுங்கி சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அந்த பகுதியில் இருந்தவர் கள் மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்த னர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஜெயந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ‌ ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்