காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு

காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-05-06 02:50 GMT
காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வசதியுடன் 250 படுக்கைகளுடன் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிடத்தை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மக்கள் தொகை அதிகம் கொண்ட குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம் பகுதிகளில் கூடுதல் முகாம்கள் அமைக்கப்பட்டு பரிசோதனை நடந்து வருகிறது.

தற்போது காஞ்சீபுரம் மாவட்டத்தில் 613 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளது. இதுவரை 466 நபர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதம் 147 ஆக்சிஜன் படுக்கைகள் காலியாக உள்ளது.

காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 375 படுக்கைகள் உள்ளது. இதில் 250 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி உள்ளது. தற்போது 50 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ஜீவா, மருத்துவ அலுவலர்கள் மற்றும் பொதுப்பணி துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்