ஆர்ப்பாட்டம் நடத்திய 13 பேர் மீது வழக்கு

எஸ்.புதூர் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய 13 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.;

Update:2021-05-06 23:38 IST
எஸ்.புதூர்,

 மேற்கு வங்காள மாநிலத்தில் பா.ஜனதா கட்சியினர் மீது நடத்திய தாக்குதலை கண்டித்து எஸ்.புதூர் பஸ் நிறுத்தம் அருகே பா.ஜனதா கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கொரோனா ஊரடங்கு சமயத்தில் அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக எஸ்.புதூர் ஒன்றிய பா.ஜனதா நிர்வாகிகள் தேவேந்திரன், சின்னையா, செல்வராஜ், சண்முகவேலு உள்ளிட்ட 13 பேர் மீது உலகம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்