ஆரணியில் கொரோனா தொற்றுக்கு முதியவர் பலி
ஆரணியில் கொரோனா தொற்றுக்கு முதியவர் பலி;
ஆரணி
ஆரணி கொசப்பாளையம் சுந்தரம் தெருவைச் சேர்ந்தவர் அண்ணாமலையார் (வயது 80). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு நேற்று முன்தினம் இரவு இறந்தார்.