ஆத்தூர் பகுதியில் முக கவசம் அணியாத 242 பேருக்கு அபராதம்

முக கவசம் அணியாத 242 பேருக்கு அபராதம்;

Update:2021-05-07 06:57 IST
ஆத்தூர்:
ஆத்தூர் பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முக கவசம் அணியாமல் செல்பவர்களை பிடித்து அபராதம் விதிக்க ஆத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு இம்மானுவேல் ஞானசேகரன் போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாதேவன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் போலீசார் ஆத்தூர் காமராஜர் ரோடு புதுப்பேட்டை, மஞ்சினி பிரிவு ரோடு ஆகிய பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது முக கவசம் அணியாமல் வந்த 220 பேருக்கு தலா ரூ.200 வீதம் மொத்தம் ரூ.44 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
இதே போல ஆத்தூரில் முக கவசம் அணியாத 22 பேருக்கும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 2 கடைக்காரர்களுக்கும் நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர். தலைவாசல் காய்கறி மார்க்கெட்டுக்கு முக கவசம் அணியாமல் வந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் 31 பேருக்கு தலா ரூ.200  அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்