புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதிகள் வெறிச்சோடின

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நேற்று நடைபெற்றது.;

Update:2021-05-07 10:16 IST
பள்ளிப்பட்டு, 

இதில் நகரத்திலுள்ள அனைத்து கடைகளும் பகல் 12 மணியுடன் அடைக்கப்பட்டன. தெருக்கள் ஜன நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. பஸ்கள் குறைந்த அளவு பயணிகளுடன் ஓடின.

அதேபோல் பள்ளிப்பட்டு நகரில் அனைத்து கடைகளும் 12 மணியுடன் அடைக்கப்பட்டன. நகரில் ஜன நடமாட்டம் இன்றி அனைத்து தெருக்களும் வெறிச்சோடி காணப்பட்டன. பஸ்கள் அனைத்தும் குறைந்த அளவு பயணிகளுடன் இயங்கின.

மேலும் செய்திகள்