புனேவில் இருந்து 1 லட்சம் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி சென்னை வந்தது

தமிழகத்துக்கு கூடுதலாக தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்தது.

Update: 2021-05-07 05:39 GMT
ஆலந்தூர், 

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் மத்திய மருந்து தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு கூடுதலாக தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்தது.

அதன்படி மத்திய மருந்து சேமிப்பு கிடங்கில் இருந்து ‘கோவிஷீல்டு’ மற்றும் ‘கோவக்சின்’ தடுப்பூசி மருந்துகள் தமிழகத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அதன்படி புனேவில் இருந்து 1 லட்சம் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி விமானத்தில் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் தமிழக சுகாதார துறை அதிகாரிகள், கன்டெய்னர் மூலமாக சென்னையில் உள்ள மருத்துவ தலைமை கிடங்கிற்கு அவற்றை கொண்டு சென்றனர்.

தமிழகத்துக்கு ஏற்கனவே இதுவரை 73 லட்சத்து 60 ஆயிரத்து 720 டோஸ் ‘கோவிஷீல்டு’ மற்றும் ‘கோேவக்சின்’ தடுப்பூசி மருந்து வந்துள்ளது. தற்போது கூடுதலாக வந்துள்ள 1 லட்சம் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியையும் சேர்த்து 74 லட்சத்து 60 ஆயிரத்து 720 டோஸ்கள் வந்து உள்ளன. தமிழகத்தில் இதுவரை 61.3 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்