ஆட்டோவில் மணல் கடத்தியவர் கைது

ஆட்டோவில் மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்;

Update:2021-05-08 01:54 IST
ஆவூர்
ஆவூர், வங்காரம்பட்டி, முள்ளிப்பட்டி ஆகிய ஊர்களை ஒட்டியுள்ள கோரையாற்றுப்பகுதியில் இருந்து நேற்று அதிகாலை சரக்கு ஆட்டோவில் சிலர் மணல் அள்ளி கடத்தி செல்வதாக மாத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாத்தூர் ஈபி அலுவலகம் வழியாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் கோரையாற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மணல் கடத்தியதாக வங்காரம்பட்டி கிராமத்தை சேர்ந்த கருப்பையா மகன் ஜெயசுந்தர் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்