இன்று முதல் முழு ஊரடங்கு மதுக்கடையில் குவிந்த மது பிரியர்கள்

இன்று முதல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் நேற்று மதுக்கடையில் மது பிரியர்கள் குவிந்தனர்.

Update: 2021-05-10 06:02 GMT
காஞ்சீபுரம், 

தமிழகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு இன்று (திங்கட்கிழமை) முதல் முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. முழு ஊரடங்கின் போது காய்கறி கடைகள், மருந்து கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்படுகிறது.

இநத நிலையில் நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் ரூ.426 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.

ரூ.12 கோடிக்கும் அதிகமாக...

காஞ்சீபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட 111 மது கடைகளில் நேற்று முன்தினம் ரூ.12 கோடிக்கும் அதிகமாக மதுபானம் விற்பனையாகியுள்ளது.

இந்த நிலையில் நேற்று மது கடைகள் இயங்க கடைசி நாள் என்பதால் காஞ்சீபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட அரசு மதுக்கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்த ஏராளமான மது பிரியர்கள் மதுபாட்டில்களை மூட்டை மூட்டையாக வாங்கிச்சென்றனர்.

மேலும் செய்திகள்