கழுகுமலையில் மது விற்றவர் கைது

கழுகுமலையில் மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2021-05-17 17:29 IST
கழுகுமலை:
கழுகுமலையில் நேற்று முன் தினம் புதிய பஸ் நிலையம் அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காந்திமதி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியிலுள்ள மறைவான இடத்தில் மது விற்பனை செய்த வெள்ளப்பனேரி சேர்ந்த கந்தையா மகன் முருகன் (வயது 48) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 48 மதுபாட்டில்கள் மற்றும் ரூ. 550ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்