நாக்பூரில் இருந்து 1,750 கிலோ கொரோனா பரிசோதனை உபகரணங்கள் சென்னை வந்தன

நாக்பூரில் இருந்து 1,750 கிலோ கொரோனா பரிசோதனை உபகரணங்கள் சென்னை வந்தன.

Update: 2021-05-18 10:55 GMT
ஆலந்தூர்,

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் ஆக்சிஜன் தேவைகள் அதிகரித்து உள்ளதால் வெளிநாடுகளில் இருந்தும், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்தும் தமிழகத்துக்கு ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகள் கொண்டு வரப்படுகின்றன. மேலும் அதிக அளவில் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும் என்பதால் பி.சி.ஆர். பரிசோதனை உபகரணங்கள் தேவைப்படுவதாக தமிழக அரசு கோரியது. இதையடுத்து மராட்டிய மாநிலம் நாக்பூரில் இருந்து இந்திய விமானப்படை விமானத்தில் 6 பெட்டிகளில் 1,750 கிலோ எடைகொண்ட கொரோனா பரிசோதனை உபகரணங்கள் சென்னை விமான நிலையத்துக்கு வந்து சோ்ந்தது. விமான நிலைய அதிகாரிகள் அவற்றை அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

மேலும் செய்திகள்