சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலையில் பரிதாபம் இரும்பு ‘கேட்’ சரிந்து விழுந்து 2 பேர் பலி
சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலையில் பிரம்மாண்ட இரும்பு ‘கேட்’ சரிந்து விழுந்ததில் என்ஜினீயர் மற்றும் ரெயில்வே போலீஸ்காரர் ஆகிய 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.;
சென்னை,
சென்னை வில்லிவாக்கம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் நற்குணன் (வயது 55). இவர், சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலையில் பர்னிச்சர் பகுதியில் என்ஜினீயராக வேலை செய்து வந்தார்.
நேற்று மாலை வேலை முடிந்து நற்குணன் வீட்டுக்கு புறப்பட்டார். இதற்காக அவர், பர்னிச்சர் பகுதியின் சுமார் 15 அடி உயரம், 20 அடி நீளமுள்ள நுழைவுவாயில் ‘கேட்டை’ அவர் மூட முயற்சி செய்தார். அங்கு பாதுகாப்பு பணியில் ஐ.சி.எப். தெற்கு காலனியை சேர்ந்த ரெயில்வே போலீஸ்காரர் லக்குமணன் (41) என்பவர் ஈடுபட்டு இருந்தார்.
‘கேட்’ சரிந்து 2 பேர் பலி
அப்போது எதிர்பாராதவிதமாக ‘கேட்’டின் அடிப்பகுதியில் உள்ள சக்கரத்தின் அச்சு முறிந்ததால், பிரம்மாண்டமான அந்த இரும்பு ‘கேட்’ கீழே சாய்ந்தது. இதில் என்ஜினீயர் நற்குணன், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ரெயில்வே போலீஸ்காரர் லக்குமணன் இருவர் மீதும் இரும்பு ‘கேட்’ விழுந்தது.
இதில் படுகாயம் அடைந்து, ‘கேட்’டுக்கு அடியில் சிக்கி தவித்த இருவரையும் சக ஊழியர்கள் மீட்டு ஐ.சி.எப். ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு இருவரையும் பரிசோதித்த டாக்டர்கள், அவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ஐ.சி.எப். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஐ.சி.எப். தொழிற்சாலை ஊழியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.