காஞ்சீபுரத்தில் அத்தியாவசிய தேவைகளின்றி சுற்றி திரிந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை

காஞ்சீபுரத்தில் அத்தியாவசிய தேவைகளின்றி சுற்றி திரிந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை.;

Update:2021-05-19 16:45 IST
காஞ்சீபுரம்,

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதையொட்டி போலீசார் காஞ்சீபுரத்திலுள்ள முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசிய தேவைகளின்றி சாலைகளில் சுற்றி திரிந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் காஞ்சீபுரம் ரங்கசாமி குளம் அருகே வாகன ஓட்டிகளுக்கு, காஞ்சீபுரம் வருவாய் ஆர்.டி.ஓ. ராஜலட்சுமி தலைமையில் பெருநகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

அத்தியாவசிய தேவைகளின்றி சுற்றி திரிந்தவர்களுக்கு திடீரென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்