காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் தற்காலிக காய்கறி சந்தை நாளை முதல் இயங்கும்
காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் தற்காலிக காய்கறி சந்தை நாளை முதல் இயங்கும்.;
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சீபுரம் பெருநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று பரவி வருவதை தடுக்கும் பொருட்டு ரெயில்வே ரோட்டில் இயங்கி வரும் ராஜாஜி காய்கறி சந்தை தற்காலிகமாக காஞ்சீபுரம் பஸ் நிலையத்திலும், ஓரிக்கை பஸ் நிலையத்திலும் மாற்றப்பட்டுள்ளது. மொத்த காய்கறி வியாபாரிகளுக்கு பெருநகராட்சியால் கடைகள் ஒதுக்கீடு செய்து, நகராட்சியால் வழங்கப்படும் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த காய்கறி கடைகளுக்கு பொதுமக்களை தவிர்த்து சில்லரை வியாபாரிகள், சமூக இடைவெளியை கடைபிடித்து காய்கறிகளை வாங்கி கொள்ளலாம். மேலும் ரெயில்வே சாலையில் அமைந்துள்ள மளிகை கடைகள் அதே இடத்தில் இயங்கலாம். அடையாள அட்டை வைத்துள்ள சில்லரை வியாபாரிகள் மட்டுமே மளிகை பொருட்களை வாங்கி கொள்ளலாம். பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது.
இடமாற்றம் செய்யப்பட்ட காய்கறி சந்தைகள் நாளை (வியாழக்கிழமை) முதல் செயல்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.