அமெரிக்கா, ஹாங்காங், சீனா நாடுகளில் இருந்து 3 சரக்கு விமானங்களில் 52 ஆக்சிஜன் கருவிகள் சென்னை வந்தடைந்தன
அமெரிக்கா, ஹாங்காங், சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 3 சரக்கு விமானங்களில் 52 ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவிகள் சென்னை வந்தடைந்தன.;
ஆலந்தூர்,
நாடு முழுவதும் கொரோனா 2-ம் அலை பெருமளவில் பரவி வருகிறது. தமிழகத்திலும் அதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதையடுத்து கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு மூச்சு திணறல் ஏற்படுவதால் அவர்களுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
இதையடுத்து முதல்-அமைச்சா் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், தமிழக அரசு ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பதிலும், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவிகள் கொண்டு வருவதிலும் போா்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவிகளும் பெருமளவு தமிழ்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுகின்றன.
52 ஆக்சிஜன் கருவிகள்
இதையடுத்து ஆஸ்பத்திரிகள், தனியாா் மற்றும் தன்னார்வ அமைப்புகள் ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகளை அதிகமாக இறக்குமதி செய்ய தொடங்கிவிட்டன. இந்த நிலையில், அமெரிக்கா, சீனா, ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து சென்னைக்கு நேற்று வந்த 3 சரக்கு விமானங்களில் 52 ஆக்சிஜன் கருவிகள் வந்து இறங்கின.
அப்போது, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் ஆக்சிஜன் கருவிகள் அடங்கிய பாா்சல்களுக்கு முன்னுரிமை வழங்கி உடனடியாக சுங்கச் சோதனைகள் முடித்து வினியோகத்துக்கு விரைந்து அனுப்பினா். அடுத்த சில நாட்களில் மேலும் பல கருவிகள் வெளிநாடுகளில் இருந்து வரவிருப்பதாக கூறப்படுகிறது.