திருவள்ளூர் மாவட்டத்தில் 3 நாள் சோதனையில் 332 வாகனங்கள் பறிமுதல்

திருவள்ளூர் மாவட்டத்தில் 3 நாள் சோதனையில் 332 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2021-05-19 12:44 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் துறை சார்பில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று 2-வது அலை பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அரசின் விதிமுறைகளை பின் பற்றி பொதுமக்கள் விழிப்புடன் பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும் என பலமுறை எச்சரித்தும் பொதுமக்கள் அதை பின்பற்றாமல் சுற்றி திரிந்து வந்தனர். இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் கொரோனா தொற்றை பரப்பும் வகையில் பொது இடங்களில் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் சுற்றி திரிந்த 484 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் காரணமின்றி சுற்றித்திரிந்தவர்களின் 332 வாகனங்களும் பறிமுதல் செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போலீசார் வேண்டுகோள்

இந்த நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தப்பட்டு பொது இடங்களில் அரசின் விதிமுறைகளை பின்பற்றாமலும், முககவசம் அணியாமலும், காரணமின்றி வாகனங்களில் சுற்றி திரியும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீசார் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலனுக்காகவும், அவர்களை சார்ந்தவர்களின் நலனை காக்கவும் போலீசாருக்கு போதிய ஒத்துழைப்பு வழங்கி அரசின் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கடைபிடித்து அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டுமென மாவட்ட போலீசார் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்