ஆரணி, சேவூரில் விதிகளை மீறி செயல்பட்ட 48 கடைகளுக்கு ‘சீல்’

ஆரணியில் விதிகளை மீறி செயல்பட்ட 48 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Update: 2021-05-19 17:16 GMT
ஆரணி

விதிகளை மீறி செயல்பட்ட கடைகள்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. மளிகை மற்றும் காய் கறி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே சதிறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்றகடைகள் திறக்க அனுமதி கிடையாது. ஆனால் ஆரணியில் அனுமதிக்கப்படாத சில கடைகளும் விதிகளை மீறி செயல்படுவதாக புகார்கள் வந்தது.

அதைத்தொடர்ந்து நேற்று ஆரணியில்  துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) சுரேஷ் பாண்டியன் தலைமையில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியளிக்கப்படாத ஜவுளி, எலக்ட்ரிக்கல், பாத்திர மெக்கானிக் ஷாப், பேன்சி ஸ்டோர் உள்ளிட்ட கடகளை வெளிப்பக்கமாக பூட்டிக்கொண்டு வியாபாரம் செய்தது தெரியவந்தது. அதன்பேரில் 42 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைபிடிக்காத மளிகை கடைகள் பூட்டப்பட்டது. 

48 கடைகளுக்கு சீல் வைப்பு

மெடிக்கல்ஸ், நாட்டு மருந்து கடை கடைகளுக்கு முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. நகராட்சி சுகாதார ஆய்வாளர் குமரவேல், வருவாய் ஆய்வாளர் வேல்மணி, கிராம நிர்வாக அலுவலர் ஜெயச்சந்திரன், ஆரணி டவுன் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு, நந்தகுமார் மற்றும் குழுவினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதேபோல் ஆரணியை அடுத்த சேவூர் ஊராட்சியில் ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன், சேவூர் கிராம நிர்வாக அலுவலர் சரவணன் ஆகியோர் அந்தப்பகுதியில் திறந்திருந்த இரண்டு அடகுக் கடைகள், பேன்ஸி ஸ்டோர், மொபைல் ஷோரூம் உள்ளிட்ட 6 கடைகளுக்கு சீல் வைத்தனர். மொத்தம் 48 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்