கரூரில் டெக்ஸ்டைல் ஏற்றுமதி நிறுவனங்கள் மூடல்

கரூரில் டெக்ஸ்டைல் ஏற்றுமதி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

Update: 2021-05-19 18:13 GMT
கரூர்
கொரோனா
கரூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் 2-வது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நோய் பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு கடந்த 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா பரவல் கட்டுக்குள் வராத காரணத்தால் ஊரடங்கை தீவிரப்படுத்தும் விதமாக கரூர் மாவட்டத்தில் மளிகை, பலசரக்கு காய்கறிகள், இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள் குளிர்சாதன வசதி இன்றி இயங்கும் கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே இயங்கி வருகிறது. 
ஏற்றுமதி நிறுவனங்கள் மூடல்
மேலும் கரூரில் டெக்ஸ்டைல் ஏற்றுமதி நிறுவனங்கள் மட்டும் இயங்கி வந்தன. இதனால் இந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் அதிக அளவில் வந்ததால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து டெக்ஸ்டைல் ஏற்றமதியாளர்கள் சங்கம் சார்பில் 19-ந்தேதி (நேற்று) முதல் அனைத்து டெக்ஸ்டைல் ஏற்றுமதி நிறுவனங்களும் உற்பத்தியை நிறுத்தி மூடப்படுவதாக அறிவித்தனர். 
 வெறிச்சோடியசாலைகள்
இதனையடுத்து நேற்று முதல் கரூர் செங்குந்தபுரம், காமராஜ்நகர், ராமகிருஷ்ணபுரம், கேவிபி நகர் உள்ளிட்ட நகரின் அனைத்து பகுதிகளிலும் இயங்கி வந்த டெக்ஸ்டைல் ஏற்றுமதி நிறுவனங்களும் மூடப்பட்டன. இதனால் எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் பரபரப்பாக காணப்படும் சாலைப்பகுதிகள் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் செய்திகள்