நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம்

நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம்

Update: 2021-05-19 18:16 GMT
கிணத்துக்கடவு

கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. இதனால் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதற்கு கூட படுக்கை வசதிகள் கிடைப்பது இல்லை. இதையடுத்து சிகிச்சை மையங்கள் அதிகப்படுத்தப்பட்டு வருகின்றன. 

அதன்படி தற்போது கிணத்துக்கடவு அருகே உள்ள நல்லட்டி பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. 

இதையடுத்து அங்கு படுக்கைகள், மின்விசிறிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் பணி நடந்து வருகிறது. 

இது குறித்து வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.சித்ரா கூறும்போது, நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. 

ஒருசில பணிகள் மட்டுமே முடிக்க வேண்டும். அந்த பணிகள் முடிந்ததும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றார். 

மேலும் செய்திகள்