எஸ்.புதூர்
எஸ்.புதூர் அருகே உள்ள உரத்துப்பட்டி கிராம பகுதியில் உலகம்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதேகிராமத்தைச் சேர்ந்த அழகப்பன் மகன் முருகேசன் (வயது 35) தனது பெட்டிக்கடையில் வைத்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததை கண்டுபிடித்தனர். இதை தொடர்ந்து 25 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து முருகேசன் மீது உலகம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.