சூறாவளி காற்றுடன் மழை: திருச்சி பாலக்கரை பகுதியில் அரசமரம் வேரோடு சாய்ந்தது

திருச்சி பாலக்கரை பகுதியில் அரசமரம் வேரோடு சாய்ந்தது

Update: 2021-05-20 20:07 GMT
திருச்சி
திருச்சியில் நேற்று முன்தினம் சுமார் ஒரு மணிநேரம் கோடை மழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் குறைந்தது. நகரின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் 2-வது நாளாக மீண்டும் திருச்சி நகரின் பல பகுதிகளிலும் மழை பெய்தது. அப்போது சூறாவளி காற்றும் பலமாக வீசியது. சூறாவளி காற்றால் பாலக்கரை தென்னூர் ஆழ்வார்தோப்பு ஓ பாலம் அருகே இருந்த பழமையான அரசமரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இதனால், இரவில் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர். சாலையில் விழுந்த மரத்தை அப்பகுதி மக்கள் வெட்டி அப்புறப்படுத்தினார்கள்.

மேலும் செய்திகள்