ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 57 பேர் மீது வழக்கு; இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 57 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.;

Update:2021-05-21 01:54 IST
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி சாலையில் தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றித்திரிபவர்களை வாகன சோதனையில் பிடித்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, வாகனங்களை பறிமுதல் செய்ய போலீசாருக்கு பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் கடந்த 18-ந்தேதி முதல் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 3-வது நாளாக நேற்று மாவட்டத்தில் சாலையில் தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றித்திரிந்த 57 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 57 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்