சுகாதார ஆய்வாளருக்கு அபராதம் விதித்த போலீசார்

கொரோனா பணியில் ஈடுபட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய சுகாதார ஆய்வாளருக்கு போலீசார் அபராதம் விதித்தனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் மனு அளித்து உள்ளார்.;

Update:2021-05-30 02:08 IST
மதுரை,

கொரோனா பணியில் ஈடுபட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய சுகாதார ஆய்வாளருக்கு போலீசார் அபராதம் விதித்தனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் மனு அளித்து உள்ளார்.

சுகாதார ஆய்வாளர்

மதுரை மாவட்டம் வலையங்குளம் வட்டார ஆரம்ப சுகாதாரநிலையத்தில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிபவர் மணிகண்டன். சம்பவத்தன்று இவர் அச்சம்பத்து பகுதியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி மையத்தில் பணி முடிவடைந்து  மேலவளூரில் உள்ள வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தார்.
 அப்போது கீரைத்துறை ெரயில்வே கேட் அருகில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்த மணிகண்டனை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர் சுகாதாரத்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையை காண்பித்தும், தற்போது கொரோனா பணி முடித்துவிட்டு வீடு திரும்புவதாக கூறியுள்ளார். ஆனால் போலீசார் அவரது வாகன எண் மற்றும் அவரது பெயரை குறித்து கொண்டு, இது சாதாரண நடைமுறை என கூறி அவரை அனுப்பி வைத்துள்ளனர்.

அபராதம்

 இதனையடுத்து அவர் வீட்டிற்கு சென்றார். அப்போது அவரது செல்போன் எண்ணுக்கு அவரது வாகனம் ஊரடங்கை மீறி வெளியில் வந்ததாக கூறி ரூ.500அபராதம் விதிக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. அதை கண்ட மணிகண்டன் அதிர்ச்சியடைந்தார்.
மேலும் கொரோனா முன்களப்பணியாளரான சுகாதார ஆய்வாளருக்கு உரிய அனுமதி பெற்ற நிலையில் போலீசார் அபராதம் விதித்திருப்பதாக கூறி மாநகர போலீஸ் கமிஷனருக்கு ஆன்லைன் மூலமாக புகார் அளித்தார். மேலும் இது குறித்து மதுரை மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து புகார் மனுவும் அளித்தார். அந்த மனுவில் கொரோனா பணியில் ஈடுபட்டு வரும் முன்களப்பணியாளர் எனக்கூறியும் போலீசார் எடுக்கும் நடவடிக்கைகள் தனக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. எனவே அரசு இது போன்ற நடவடிக்கையை தடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

மேலும் செய்திகள்