காஞ்சீபுரம் சித்த மருத்துவ சிகிச்சை பிரிவுக்கு உபகரணங்கள் எம்.எல்.ஏ. வழங்கினார்

காஞ்சீபுரத்தை அடுத்த ஏனாத்தூரில் அமைந்துள்ள மீனாட்சி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது.

Update: 2021-05-31 04:24 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தை அடுத்த ஏனாத்தூரில் அமைந்துள்ள மீனாட்சி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் 187 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்றனர். அவர்களில் 101 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 86 பேர் சித்த மருத்துவ சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த மையத்தில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு ஆவி பிடிக்கும் உபகரணங்கள் இல்லை என்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து காஞ்சீரம் எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி.எழிலரசன் 50 ஆவி பிடிக்கும் உபகரணங்களை சித்த மருத்துவ சிகிச்சை பிரிவுக்கு வழங்கினார். காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் அய்யாச்சாமி, சித்த மருத்துவர்கள் முத்துக்குமார், பார்வதி ஆகியோர் ஆவி பிடிக்கும் உபகரணங்களை பெற்று கொண்டனர்.

இதில் அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் கல்பனா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்