150 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் சிகிச்சை மையம் அமைக்கும் பணி

150 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் சிகிச்சை மையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2021-05-31 18:24 GMT
திருப்பரங்குன்றம்,ஜூன்
திருப்பரங்குன்றம் ஒன்றியம் தோப்பூர் ஆஸ்டின்பட்டியில் உள்ள அரசு நுரையீரல் சிறப்பு மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையம் மற்றும் தனிமைப்படுத்தும் மையமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதல் கட்டமாக 200 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் தயார் செய்யப்பட்டது. அதனை கடந்த 21-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த நிலையில் 2-ம் கட்டமாக தற்போது கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 150 படுக்கைகள் கொண்ட சிகிச்சை சிறப்பு மையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணியை நேற்று அமைச்சர் மூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் காந்திமதி நாதன், ஆர்.டி.ஓ. சவுந்தர்யா, தி.மு.க. ஒன்றிய செயலாளர் பெரியசாமி, பகுதி செயலாளர் உசிலை சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்