கொரோனா தடுப்பு பணி ஆய்வு கூட்டம்
கொரோனா தடுப்பு பணி ஆய்வு கூட்டம் நடந்தது;
வாடிப்பட்டி
வாடிப்பட்டி தாய் மெட்ரிக் பள்ளியில் கொரோனா தடுப்பு பணிகள் ஆய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு ஆர்.டி.ஓ. முருகானந்தம் தலைமை தாங்கினார். தாசில்தார் பழனிக்குமார் முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் சஞ்சிவீநாதன் வரவேற்றார். இந்த கூட்டத்தில் யூனியன் கமிஷனர்கள் ராஜா, ராமமூர்த்தி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சார்லஸ், வட்டார மருத்துவ அலுவலர் மனோஜ்பாண்டியன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முனியசாமி, செயல் அலுவலர்கள் கிராமநிர்வாக அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தாலுகா அளவில் 8 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்கள் தனிமைபடுத்தும் மையங்களின் செயல்பாடுகள், தடுப்பூசி மற்றும் காய்ச்சல் உள்ளவர்களின் கணக்கெடுப்புபணி, தினந்தோறும் தொற்றாளர்களின் சிகிச்சை விவரங்கள் உள்ளிட்டவைகள் பற்றி ஆய்வு செய்யப்பட்டது.