மதுபாட்டில் விற்ற 5 பேர் சிக்கினர்
மதுரையில் மதுபாட்டில் விற்ற 5 பேர் சிக்கினர்;
மதுரை, ஜூன்
ஊரடங்கால் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் நகரில் பல்வேறு பகுதிகளில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீஷ் கமிஷனருக்கு தகவல் வந்தது. எனவே நகரில் திருட்டுத்தனமாக மது விற்பவர்களை கைது செய்ய போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். அதன் பேரில் மதுவிலக்கு பிரிவு போலீசார் நகர் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மதுரை ரெயில் நிலையம் பகுதியில் மது விற்ற புதூரை சேர்ந்த குமார் (வயது 28), அன்புமாறன் (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். விளாங்குடி பகுதியில் மது விற்ற பெத்தானியாபுரத்தை சேர்ந்த செல்வம் (45), அருண்குமார் (30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அதே போன்று கரிமேடு போலீசார் மேலபொன்னகரம் 3-வது தெருவில் மது விற்ற மேத்யூ சுரேஷ்குமார் (42) என்பவரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.