9-வது ஆண்டு தொடக்க விழா: அம்மா உணவகத்தில் இனிப்பு

9-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி அம்மா உணவகத்தில் இனிப்பு வழங்கப்பட்டது.;

Update:2021-06-03 02:00 IST
தமிழகத்தில் ஏழை எளியவர்களுக்கு பசியாற்றும் வகையில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டன. இந்த உணவகங்கள் தொடங்கி 8 ஆண்டுகள் நிறைவடைந்து 9-வது ஆண்டு தொடங்கி உள்ளது.
இதையொட்டி நேற்று ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள அம்மா உணவக பணியாளர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். நேற்று காலை இட்லி வாங்க வந்தவர்களுக்கு கேசரி வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
----------

மேலும் செய்திகள்