ஈரோட்டில் நேற்று காலையில் இருந்து பகல் 2 மணி வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதன்பின்னர் கருமேகங்கள் கூடத்தொடங்கின. இதனால் மழை பெய்யாதா என்று பொதுமக்கள் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் 11.40 மணியில் சாரல் மழை பெய்யத்தொடங்கியது. இந்த மழையானது சிறிது நேரத்தில் பலத்த மழையாக மாறியது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கிநின்றது. ஈரோடு அரசு ஆஸ்பத்திரி, நாச்சியப்பாவீதி, ஈரோடு பஸ்நிலையம் போன்ற பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன்காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. நள்ளிரவு 12.20 மணியில் இருந்து மழை தூறிக்கொண்டே இருந்தது.