அம்பேத்கர் உருவப்படம் சேதம்; 4 பேர் கைது
அம்பேத்கர் உருவப்படம் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக 4 பேர் கைது;
விருதுநகர்,ஜூன்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டியில் அம்பேத்கர் உருவப்படத்துடன் விளம்பர பேனர் வைக்கப்பட்டிருந்தது. இந்த விளம்பர பேனர் சேதப்படுத்தப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிளை செயலாளர் ஆண்டிசெல்வம் நத்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூரியபிரகாஷ் (23), பாஸ்கரன் (20) உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.