மணல் அள்ளி வந்த வாகனங்கள் பறிமுதல்
மணல் அள்ளி வந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன;
பேரையூர்,
பேரையூர் தாலுகாவில் உள்ள அய்யனார் கோவில் ஓடையில் மணல் அள்ளப்படுவதாக வந்த தகவலை அடுத்து வண்டாரி கிராம நிர்வாக அலுவலர் சங்கீதா, மற்றும் கிராம உதவியாளர் ஆகியோர் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்குள்ள ஓடையில் இருந்து டிராக்டரில் மணல் அள்ளி வந்தவர்கள் கிராம நிர்வாக அலுவலரை பார்த்தவுடன் டிராக்டரை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து அங்கிருந்த டிராக்டர் மற்றும் வேவு பார்க்க வந்த மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை கிராம நிர்வாக அலுவலர் பறிமுதல் செய்து சாப்டூர் போலீசில் ஒப்படைத்தார். இதுகுறித்து சாப்டூர் போலீசார், மெய்யனுத்தம்பட்டியை சேர்ந்த சுந்தரபாண்டி (வயது38) மற்றும் 2 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.