வளர்த்த நாயை கொன்றவர் கைது

வளர்த்த நாயை கொன்றவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2021-06-05 01:40 IST
புதூர்,
மதுரை திருவாதவூரை சேர்ந்தவர் பொன்னையா (வயது 60) இவர் தோட்டத்தில் விவசாயம் வேலை பணிகள் செய்து வந்தார். காவல் பணிக்கு ஒரு நாயை வளர்த்து வந்தார்.  இந்த நாய் திடீரென்று  கோழிகளை கடிக்க ஆரம்பித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் நாயை தாக்கியதில் அது இறந்தது. இந்தநிலையில் அந்த நாயை புதைப்பதற்குமுன் அதே பகுதியில் ஒரு மரத்தில் கட்டி தொங்க விட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த ஊமச்சிகுளம் போலீசார் விசாரணை நடத்தி  பொன்னையா மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

மேலும் செய்திகள்