பால் வியாபாரி தற்கொலை செய்துகொண்டார்.

பால் வியாபாரி தற்கொலை;

Update:2021-06-05 05:11 IST
மதுரை, 
மதுரை செல்லூர் 60 அடி ரோடு பகுதியை சேர்ந்தவர் தங்கபாண்டி (வயது 27). பால் வியபாரம் செய்து வந்தார். கடந்த சில மாதங்களாக வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் அவர் மதுவிற்கு அடிமையானார். அதனால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. மேலும் கொரோனா ஊரடங்கு இருப்பதால் பணம் பிரச்சினையும் அவருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவருத்தம் அடைந்த தங்கபாண்டி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்