அழகர்கோவிலில் பலத்த மழை

அழகர்கோவிலில் பலத்த மழை பெய்தது.;

Update:2021-06-05 05:23 IST
அழகர்கோவில், 
தென்மேற்கு பருவமழை நேற்று தொடங்கியது. இதையொட்டி மதுரையை அடுத்த அழகர்கோவில், அழகர் மலை மற்றும் சுற்றுவட்டாரங்களில் நேற்று மதியம் முதல் மாலை வரை லேசானது முதல் பலத்த மழை பெய்தது. இதனால் மழை தண்ணீர் கோவில் வளாகப் பகுதி பெருக்கெடுத்து ஓடியது. மேலும் அலங்காநல்லூர், காஞ்சரம்பேட்டை பகுதிகளில் மழை பெய்தது. இதனால் பெரியாறு பாசனபகுதிகளில் விவசாயிகள் நாற்று விடும் பணியில் ஈடுபட்டனர்.கடந்த சில ஆண்டுகளுக்கு பிறகு பருமழை இந்த ஆண்டு தொடங்கி இருப்பது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்