பண்ணாரி வனப்பகுதியில் காட்டுத்தீ: மரம், செடி-கொடிகள் எரிந்து நாசம்

பண்ணாரி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் மரம், செடி-கொடிகள் எரிந்து நாசம் ஆனது.

Update: 2021-06-10 20:31 GMT
பவானிசாகர் அருகே உள்ள பண்ணாரி வனப்பகுதியில் புதுப்பீர்கடவு கிராமம் மலைப்பகுதியில் நேற்று மாலை திடீரென காட்டுத்தீ பற்றியது. சிறிது நேரத்தில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவை சுற்றிவளைத்து தீ எரிந்தது.
 இதுகுறித்து தகவலறிந்த பவானிசாகர் வனத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 
பவானிசாகர் வனப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்தது. அதனால் வனப்பகுதி பசுமையாக இருந்தது. வனப்பகுதியில் ஆடு, மாடு மேய்க்க சென்றவர்கள் அல்லது சீமார் புல் அறுக்கச் சென்றவர்கள் பீடி புகைத்துவிட்டு நெருப்ைப அணைக்காமல் போட்டு இருக்கலாம். அதனால் தீப்பற்றி இருக்கலாம் என்று வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காட்டுத்தீயை மேலும் பரவ விடாமல் அணைக்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தீ விபத்தால் அரிய வகை மரம், செடி, கொடிகள் எரிந்து நாசம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. 

மேலும் செய்திகள்