கொரோனா தொற்றால் விவசாயி உயிரிழப்பு தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்களிடம் உறவினர்கள் வாக்குவாதம்

காஞ்சீபுரம், கொரோனா தொற்றால் விவசாயி உயிரிழப்பு தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்களிடம் உறவினர்கள் வாக்குவாதம்;

Update:2021-06-11 07:59 IST
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அடுத்த மாகரல் கிராமத்தை சேர்ந்தவர். அப்பாதுரை, விவசாயி. கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, காஞ்சீபுரம் ஏனாத்தூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் உடல்நிலை தேர்ச்சி அடைந்த தனது தந்தையை வீட்டுக்கு அனுப்பும் படி கூறியுள்ளனர்.
aXசில மணி நேரத்திலேயே டாக்டர்கள் அப்பாதுரைக்கு உடல்நிலை மோசமாக உள்ளது. பிளாஸ்மா வாங்கி வர வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. இக்கட்டான சூழ்நிலையில் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் செலுத்தி உள்ளனர்.

சிAQறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். டாக்டர்களின் செயலை கண்டித்து அவரது மகன்கள் மற்றும் உறவினர்கள் டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது மகன்களிடம் நடந்த சம்பவங்களை கேட்டறிந்து ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

தரமற்ற மருத்துவ சிகிச்சை அளிப்பதாகவும், போதிய அனுபவம் இல்லாத டாக்டர்களை பயன்படுத்துவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும் செய்திகள்