கஞ்சா விற்ற 2 பேர் சிக்கினர்

கஞ்சா விற்ற 2 பேர் சிக்கினர்;

Update:2021-06-13 00:41 IST
மதுரை
மதுரை நகரில் கஞ்சா விற்பனை, கடத்தலை தடுக்க போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்தசின்கா உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் தீவிர ரோந்து சென்று கஞ்சா விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதன்படி கரிமேடு போலீசார் ரோந்து சென்ற போது, அங்குள்ள மீன்மார்க்கெட் பகுதியில் கஞ்சா விற்பதாக தகவல் வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றபோது போலீசாரை கண்டதும் ஒருவர் மோட்டார் சைக்கிள் ஏறி தப்பி செல்ல முயன்றார். அவரை பிடித்து விசாரித்தபோது நாகமலைபுதுக்கோட்டை மேலக்குயில்குடியை சேர்ந்த தவமணி(வயது 28) என்பதும், மோட்டார் சைக்கிளில் கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து, அவரிடமிருந்து 1½ கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
அதே போன்று சுப்பிரமணியபுரம் போலீசார் பழங்காநத்தம் போடி ரெயில்வே லைன் பகுதியில் கஞ்சா விற்ற சரத்குமார்(23) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 1½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்