ஊரடங்கை மீறி இ-பதிவு இல்லாமல் வெளியே சுற்றிய 811 பேர் மீது வழக்கு பதிவு; 779 வாகனங்கள் பறிமுதல்

ஊரடங்கை மீறி இ-பதிவு இல்லாமல் வெளியே சுற்றிய 811 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 779 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-06-13 00:23 GMT
ஈரோடு
ஊரடங்கை மீறி இ-பதிவு இல்லாமல் வெளியே சுற்றிய 811 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 779 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 
779 வாகனங்கள் பறிமுதல்
தமிழகத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை சற்று குறைய தொடங்கி உள்ளது. இதன் காரணமாக மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிற 21-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
 ஊரடங்கை மீறி தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களுடைய வாகனங்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
எனினும் ஊரடங்கை பொருட்படுத்தாமல் சிலர் வழக்கம் போல் இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களில் சுற்றித்திரிகின்றனர். 19-வது நாளாக நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது முக கவசம் அணியாமல் வந்த 278 பேர், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 24 பேர், ஊரடங்கு தடையை மீறி இ-பதிவு இல்லாமல் வெளியே சுற்றிய 811 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டன.
இ-பதிவு
மேலும் வாகன ஓட்டிகளிடம் இருந்து 766 இருசக்கர வாகனங்கள் மற்றும் 13 நான்கு சக்கர வாகனங்கள்  பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சத்து 85 ஆயிரம் அபராதமும் வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று வழக்கத்தை விட வாகன எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. இதனால் ஈரோடு கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் வாகன நெரிசல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் இ-பதிவு இல்லாமல் வாகனங்களை ஓட்டி வந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களிடமிருந்து வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதன் காரணமாக பறிமுதல் செய்யப்பட்ட ஏராளமான வாகனங்கள் கருங்கல்பாளையம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

மேலும் செய்திகள்