மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தென்னக ரெயில்வே வேலைவாய்ப்புக்கான உதவி மையம் தொடக்கம்
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தென்னக ரெயில்வே வேலைவாய்ப்புக்கான உதவி மையம் தொடக்கம்;
ஈரோடு
தென்னக ரெயில்வேயில் 3 ஆயிரத்து 379 பயிற்றுனர் வேலை வாய்ப்பு உள்ளது. இதில், மெஷினிஸ்ட், எலக்ட்ரீசியன், டீசல் மெக்கானிக், ஏ.சி. மெக்கானிக், எலக்ட்ரானிக் மெக்கானிக், ரேடியாலாஜி, பெத்தலாஜி, கார்டியாலஜி, கார்பென்டர், ஒயர்மென், டியுமர், பிட்டர், வெல்டர், பெயிண்டர் ஆகிய வேலைகளுக்கான பயிற்சி, மாதம் ரூ.7 ஆயிரம் உதவி தொகையுடன் வழங்கப்பட உள்ளது. மேலும் பயிற்சி முடித்தவர்களுக்கு ரெயில்வே துறையில் வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளது. இதில், 10-ம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மற்றும் தொழில்முறை பயிற்சி முடித்த ஆண், பெண்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில், 15 வயது முதல் பொதுபிரிவில் 22 வயது வரையும், ஓ.பி.சி. பிரிவினர் 25 வயதும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 27 வயதும், மாற்றுத்திறனாளிகள் 32 வயது வரை உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான கட்டணம் ரூ.100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வு இல்லை.
தகுதியானவர்கள் www.sr.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் https://iroams.com/Apprentice recruitmentIndex விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சியில் பங்கு பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பும் வகையில், ஈரோடு மாவட்ட போலீஸ் துறை சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உதவி மையம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த பயிற்சி மையத்தை ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் நேற்று தொடங்கி வைத்தார். இந்த வாய்ப்பினை ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகள் மற்றும் மலைக்கிராமத்தில் உள்ள தகுதி வாய்ந்தவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 96552-20100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.