நாகமலைபுதுக்கோட்டை
நாகமலைபுதுக்கோட்டை அருகே சமணர்மலை ஒத்தவீடு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க செய்வதற்காக காளை ஒன்றை வளர்த்து வந்தார். இந்நிலையில் வீட்டில் கட்டியிருந்த காளை திடீரென மாயமானது. அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து செந்தில்குமார் நாகமலைபுதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். விசாரணையில் இதே பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் (வயது 35) என்பவர் காளையை திருடி, விளாச்சேரியைச் சேர்ந்த அஜித்குமார் (28), விஜய் என்ற வீரகவுதம், சிவசூர்யா ஆகியோரிடம் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து மொட்டமலை பகுதியில் பதுங்கியிருந்த 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.