டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடக்கோரி பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழக அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update:2021-06-14 07:48 IST
காஞ்சீபுரம், 

தமிழகத்தில் கொரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட தமிழக அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து காஞ்சீபுரம் மேற்கு நகர பா.ஜ.க. சார்பில் டாஸ்மாக் கடையை திறக்கும் தமிழக அரசை கண்டித்து காஞ்சீபுரம் அன்னை இந்திரா காந்தி சாலை, சாலைத்தெரு போன்ற பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர மேற்கு தலைவர் அதிசயம் குமார், நகர பொது செயலாளர் ஜீவானந்தம், மாவட்ட பொது செயலாளர் கூரம் விஸ்வநாதன் உள்ளிட்ட பா.ஜ.க நிர்வாகிகள் கலந்து கொண்டு கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்