கொரோனாவால் 9 பேர் உயிரிழப்பு
மதுரையில் ஒரே நாளில் 9 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும் புதிதாக 219 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்;
மதுரை
மதுரையில் ஒரே நாளில் 9 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும் புதிதாக 219 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
219 பேர் பாதிப்பு
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த கொரோனா பரவல் தற்போது சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில் மதுரையில் மாவட்டத்தில் நேற்று 219 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். சுமார் 8 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்ததில் 219 பேருக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 154 பேர் நகர் பகுதியையும் மற்றவர்கள் புறநகர் பகுதியையும் சேர்ந்தவர்கள். அதன் மூலம் இவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்து 328 ஆக உயர்ந்துள்ளது.
9 பேர் உயிரிழப்பு
மேலும் நேற்று ஒரே நாளில் பேர் 1277 கொரோனாவிலிருந்து குணமாகி வீட்டிற்கு திரும்பினர். இதில் 884 பேர் நகர் பகுதியையும் மற்றவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களை சேர்ந்து மதுரை மாவட்டத்தில் நோய் தொற்றிலிருந்து குணமாகி சென்றவர்களின் எண்ணிக்கை 64 ஆயிரத்து 987 ஆக உயர்ந்துள்ளது. மதுரையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாலும், சிகிச்சை முடிந்து வீடு திரும்பவுர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும், சிகிச்சை பெறுவேரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அதன்படி நேற்று மதுரையில் 4 ஆயிரத்து 332 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.
இதுதவிர மதுரையில் நேற்று 9 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்தனர். இதன் மூலம் மதுரையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1038 ஆக உயர்ந்துள்ளது.