காதல் திருமணம் செய்த ஒரே மாதத்தில் இளம்பெண் தற்கொலை

சென்னை அமைந்தகரை முத்துமாரியம்மன் காலனியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 22). கூலி தொழிலாளி. இவர், அதே பகுதியை சேர்ந்த பவானீஸ்வரி (19) என்ற பெண்ணை காதலித்து வந்தார்.;

Update:2021-06-17 09:23 IST
இவர்கள் காதல் விவகாரம் இரு வீட்டாரின் பெற்றோருக்கும் தெரியவந்தது. இருவீட்டார் சம்மதத்ததுடன் கடந்த மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி ஒரு மாதமாக அதே பகுதியில் இருவரும் வசித்து வந்தனர். கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டதால் பவானீஸ்வரி, கணவருடன் கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் தனது மனைவியை சாமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தார். இருவருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த பவானீஸ்வரி, வீட்டின் அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் பவானீஸ்வரிக்கு திருமணமாகி ஒரு மாதமே ஆவதால் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்