மதுரையில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 10 பேர் பலி

மதுரையில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்தனர். 160 பேருக்கு புதிதாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-06-18 16:27 GMT
மதுரை,ஜூன்.
மதுரையில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்தனர். 160 பேருக்கு புதிதாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. மதுரையிலும் நோய் தொற்று குறைந்து வருகிறது. அதன்படி மதுரையில் நேற்று 160 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களிடம் இருந்து சளி மாதிரிகள் எடுக்கப்பட்டிருந்தன.
 இதன் மூலம் மதுரையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்து 997 ஆக உயர்ந்துள்ளது. இது போல் நேற்று ஒரே நாளில் 760 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீட்டிற்கு சென்றனர். 
இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 68 ஆயிரத்து 211 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,726 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.
10 பேர் உயிரிழப்பு
மதுரையில் பாதிப்பு குறைந்து வந்தாலும் உயிரிழப்புகள் குறைந்தபாடில்லை. அந்த வரிசையில் நேற்று ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்தனர். 
அவர்கள் 57, 61 வயது ஆண்கள், 71, 73, 68, 69 வயது முதியவர்கள், 46,49 வயது பெண்கள், 75, 73 வயது மூதாட்டிகள் ஆவர்.
இதன் மூலம் மதுரையில் இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,060 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்