தூக்குப்போட்டு கர்ப்பிணி தற்கொலை

கணவருக்கு வேலை இல்லாததால் தூக்குப்போட்டு கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2021-06-20 01:08 IST
மதுரை,

மதுரை சின்னசொக்கிக்குளம் தனியார் குடியிருப்பை சேர்ந்தவர் அரித்தா (வயது 26).. இவருக்கும் பாஸ்கர் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இந்த நிலையில் அரித்தா 3 மாத கர்ப்பிணியாக இருந்தார்.கணவருக்கு சரியான வேலை இல்லாததால் அவர் மனவருத்தத்தில் இருந்து வந்தார். இதனால் மனவேதனை அடைந்த அவர் திடீரென்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.. மேலும் இறந்த அரித்தா தனது சாவிற்கு யாரும் காரணமில்லை என்று கூறி கடிதம் எழுதி வைத்திருந்ததை போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ.விசாரணையும் நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்