திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதால் போக்குவரத்து பாதிப்பு

லாரி பழுதால் திம்பம் மலைப்பாதையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;

Update:2021-06-21 02:43 IST
தாளவாடி
கரூரில் இருந்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகருக்கு சிமெண்ட் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள திம்பம் மலைப்பாதை 26-வது கொண்டை ஊசி வளைவில் மாலை 6 மணி அளவில் சென்றபோது திடீரென பழுதாகி நடுரோட்டில் நின்றது. இதனால் அந்த வழியாக சிறிய வாகனங்கள் மட்டும் சென்று வந்தன. மற்ற வாகனங்கள் ஏதும் செல்ல முடியவில்லை. இதைத்தொடர்ந்து அந்த வழியாக வந்த மெக்கானிக் லாரி பழுதை சரிசெய்தார். இதையடுத்து போக்குவரத்து சீரானது. அனைத்து வாகனங்களும் சென்றன.
லாரி பழுதால் திம்பம் மலைப்பாதையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்