நாகமலைபுதுக்கோட்டை அருகே வடபழஞ்சி ஊராட்சிக்குட்பட்ட தென்பழஞ்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமை ஊராட்சிகளின் உதவி இயக்குனர் செல்லத்துரை, வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஊராட்சி மன்ற தலைவர் வன்னிச்செல்வி மணி தடுப்பூசி போட்டுக்கொண்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அவரை தொடர்ந்து தூய்மைப்பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். முகாமில் துணைத்தலைவர் ஆனந்தவள்ளி ராஜாங்கம், ஊராட்சி செயலாளர் முத்துப்பாண்டி, ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.